Monday, September 28, 2009

க‌ம்போங் புவா பாலா ப‌ற்றிய‌ உண்மைக‌ள்.....

முத‌லில் இந்த‌ ந‌ரக‌ன் யார்? என்னென்ன‌ செய்தார் என்று சில‌ருக்கு தெரிய‌ வேண்டும்.கட‌ந்த‌ மார்ச் 8, 2008 பொதுத்தேர்த‌லில் வென்ற‌ பிற‌கு, ஹின்ட்ராஃப் என்ப‌து ஒரு கொள்கைய‌மைப்பு, அர‌சிய‌ல் அமைப்பு அல்ல‌; என்று கூப்பாடு போட்ட‌வ‌ர்க‌ள், அர‌சிய‌ல் நிய‌ம‌ன‌ங்க‌ளுக்கு அலைந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளில் குறிப்பிட‌த்த‌க்க‌வ‌ர்க‌ள், முன்னாள் ஹின்டராஃப் ஒருங்கிணைப்பாள‌ர், உத‌ய‌க்குமார், வேத‌மூர்த்தி ஆகிய‌ பொன்னுசாமி ச‌காக்க‌ளின்(முன்னாள்)செல்ல‌ப்பிள்ளை த‌னேந்திர‌ன், ஈப்போ வேத‌மூர்த்தி, ம‌லேசியாக்கினி நிருப‌ர் ஆதி.வீர‌ங்க‌ன் (ச‌ங்க‌ர்), ம‌ற்றும் இந்த‌ ந‌ர‌க‌ன் ஆகியோர்.

த‌னேந்திர‌ன், த‌ன‌க்கு க‌வுன்சில‌ர் ப‌த‌வி த‌ர‌ வேண்டும் என்று த‌ன‌து ச‌காக்க‌ளை வைத்து த‌மிழ் ப‌த்திரிக்கைக‌ளில் அறிக்கை விட வைத்தார். பிற‌கு, அந்த‌ க‌வுன்சில‌ர் கோரிக்கை சென‌ட்ட‌ர் கோரிக்கையான‌து, அத‌ற்கு பிற‌கு புக்கிட் செலாம்பாவ் வேட்பாள‌ர் கோரிக்கையான‌து. இதெல்லாம் நாடே அறியும்.
ஈப்போ வேத‌மூர்த்தி, த‌ன‌க்கு க‌வுன்சில‌ர் ப‌த‌வி த‌ர‌ப்ப‌ட‌வில்ல‌யென்ற‌தும், (அப்போதைய‌) மாநில‌ ம‌ந்திரி புசார் நிசாரிட‌ம் ம‌க‌ஜ‌ரெல்லாம் கொடுத்தார். இப்பொழுது இவ‌ர்க‌ள் இருவ‌ருமே, மக்க‌ள் ச‌க்தி க‌ட்சி ஆர‌ம்பித்து, ந‌ஜீப்போடு உற‌வு கொண்டு, தங்க‌ள‌து பொருளாதார‌த்தை மேம்ப்ப‌டுத்திக் கொண்டுள்ள‌ன‌ர்.
அடுத்த‌து, ம‌லேசியாக்கினி நிருப‌ர், இந்த‌ ந‌ர‌க‌னையும் பார்ப்போம், இவ‌ர்க‌ள் இருவ‌ரும் பினாங்கு இந்து அற‌ப்ப‌ணி வாரிய‌த்தில் த‌ங்க‌ளுக்கு நியம‌ன‌ம் வேண்டும் என்று நேரடியாக‌வே கேட்ட‌ன‌ர். கிடைக்கவில்லை என்ற‌தும், கூட்ட‌மெல்லாம் கூட‌ கூட்டின‌ர். பினாங்கு மாநில‌ அர‌சாங்க‌த்தை எப்பொழுதும் குறை கூறுவ‌தில் இவ‌ர்க‌ளுக்கு நிக‌ர் இவ‌ர்க‌ளே. ஆதி.ச‌ங்க‌ரின் ம‌லேசியாக்கினி எழுத்துக‌ளை பார்த்தாலே இது புரியும். இப்பொழுது க‌ம்போங் புவா பாலா விவ‌காரத்தில் ச‌ட்ட‌ சிக்க‌ல்க‌ள் நிறைய‌ இருப்ப‌தாலும், சாம‌ன்ய‌ர்க‌ளுக்கு அசிக்க‌ல்க‌ள் புரியாததாலும் அத‌னை திசை திருப்பி அல்வா சாப்பிடுவ‌துப் போல், த‌ங்க‌ள‌து வ‌ஞ்ச‌த்தை தீர்த்துக்கொள்ள‌ நினைக்கின்ற‌ன‌ர்.
குறிப்பாக‌ இந்த‌ க‌ம்போங் புவா பாலா விவ‌கார‌த்தில் மூக்கை நுழைத்து, அங்குள்ள‌ ம‌க்க‌ளை குழ‌ப்பி, த‌ங்க‌ளின் அர‌சிய‌ல் ஆசைக‌ளையும், ப‌த‌வி மோக‌த்தையும் சாதித்துக்கொள்ள‌ நினைத்த‌வ‌ர்க‌ளே அதிக‌ம்.சில‌ உதார‌ண‌ங்க‌ள் :
1. தி.மோக‌ன் (மஇகா இளைஞ‌ர‌ணி தேர்த‌லுக்காக‌ இந்த‌ புவா பாலா விவ‌கார‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்திண்டான்; மைக்கா ப‌ங்குக‌ளை திருப்பித்த‌ராத‌ சாத‌னைத்த‌லைவ‌ரோ, 3.2மில்லிய‌ன் கொடுத்து புவா பாலா கிராம‌த்தை மேம்பாட்டாள‌ரிட‌ம் வாங்க‌ப்போவ‌தாக‌ கூறினாரே, அது என்ன‌வென்று கேட்க‌ மாட்டீர்க‌ளோ?)
2.இல‌ண்ட‌ன் வேத‌மூர்த்தி (த‌னேந்திர‌னின் புதுக்க‌ட்சி தொட‌க்க‌த்தால், த‌ன்னுடைய‌ புக‌ழ், பிர‌ப‌ல்ய‌ம் பாதிக்க‌ப்ப‌டும் என்ப‌தால், திடிரென்று க‌ம்போங் புவா பாலா விச‌ய‌த்தில் அனைத்தும் தெரிந்த‌வ‌ர் போல் பேச‌த்தொட‌ங்கினார். இங்கே ம‌லேசியாவில் உள்ள‌ ப‌ல‌ருக்கே, புவா பாலா விவ‌கார‌த்தில் இருக்கும் குழ‌ப்ப‌ம் புரியாத‌ ப‌ட்ச‌த்தில், பிரிட்டிஷ் அர‌சுக்கு எதிராக‌ வ‌ழ‌க்குப்போடுவ‌த‌ற்கு சேர்க்க‌ப்ப‌ட்ட‌ மில்லிய‌ன் க‌ண‌க்கான‌ ரிங்கிட்டில், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இல‌ண்ட‌னில் சுக‌,போக‌மாக‌ வாழ்ந்து வ‌ரும் இந்த‌ வேத‌மூர்த்திக்கு அனைத்தும் தெரியுமாம்.)
3. உத‌ய‌க்குமார் (த‌ன‌து ம‌னித‌ உரிமை க‌ட்சியை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்த‌ இந்த‌ புவா பாலா விவ‌கார‌த்தை உப‌யோகித்து, ம‌லிவான‌ விள‌ம்ப‌ர‌ம் தேடியவ‌ர், பி.கு : என‌க்கு ஒரு த‌லைய‌ணை, பாய் போதும், இங்கேயே த‌ங்கியிருந்து, புவா பாலா க‌ம்ப‌ம் உடைப‌டாம‌ல் காப்பாற்றுவேன் என்று வாக்குக்கொடுத்துவிட்டு, க‌ம்ப‌ம் உடைப்ப‌டும்போது எங்கே போனார் உங்க‌ள் உத‌ய‌க்குமார்?)
4.த‌னேந்திர‌ன் (த‌ன‌து புதிய‌ ம‌க்க‌ள் ச‌க்தி க‌ட்சியை பிர‌ப‌ல‌ம‌டைய‌ வைப்ப‌த‌ற்காக‌ இந்த‌ க‌ம்போங் புவா பாலா பிர‌ச்ச‌னையில் திடிரென்று எகிறி குதித்து, இன்னும் த‌ள்ளிப்போட்டிருக்க வேண்டிய‌ க‌ம்போங் புவா பாலா வீடுக‌ள் உடைப்பை, நீதிம‌ன்ற‌ அமீனாவோடு உட‌ன்படிக்கையில் கையெழுத்திட்ட‌த‌ன் மூல‌ம்; நில‌ மேம்பாட்டு நிறுவ‌ன‌த்துக்கு உத‌வி, டிவி3 செய்திக‌ளில் முக‌ம் காட்டி த‌ன‌து சுய‌ந‌ல‌னை சாதித்துக்கொண்டார்)
5.த‌ர்ம‌ராஜ், சுகுமாற‌ன் உள்ளிட்ட‌ க‌மிட்டியின‌ர் (க‌ம்போங் புவா பாலா விவ‌கார‌த்தினால், த‌ங்க‌ள் முக‌ம், அனைத்து ப‌த்திரிக்கை, தொலைக்காட்சிக‌ளில் ஒளிப‌ர‌ப்ப‌ப‌ட்டு விட்ட‌தால், திடிரென்று கிடைத்த‌ விள‌ம்ப‌ர‌த்தால் திக்கு முகாடி போன‌ சில‌ர், என்ன‌ பேசுகிறோம் என்றே தெரியாம‌ல், பேசின‌ர். இந்த‌ விவ‌கார‌த்தை பூத‌க‌ர‌மாக்கி விட்டு, திரைக்கு பின்னால், நில‌ மேம்பாட்டு நிறுவ‌ன‌த்தோடு இர‌க‌சிய‌ ச‌ந்திப்புக‌ள் ந‌ட‌த்தி; க‌மிட்டியை ம‌ட்டும் சிற‌ப்பாக‌ க‌வ‌னிக்க‌ சொன்ன‌தும் ப‌ல‌ருக்கு தெரியாத‌ல்ல‌வா?)
6.இன்னும் ப‌ல‌ர்....(கேட்டால் சொல்கிறேன்)
வாக்குறுதி, வாக்குறுதி என்று அல‌றுகிறீர்க‌ளே; பினாங்கு மாநில‌ அர‌சான‌து கூட்ட‌ர‌சு நீதிம‌ன்ற‌ம் வ‌ரை வ‌ழ‌க்கை க‌ம்போங் புவா பாலா குடியிருப்பாள‌ர்க‌ள் கொண்டு செல்லும் வ‌ரை ஆத‌ர‌வு த‌ர‌வில்லையா? நில‌த்தை மீட்க‌ க‌டைசிவ‌ரை ச‌ட்டப்போராட்ட‌த்தில் இந்த‌ ம‌க்க‌ளுக்கு பினாங்கு மாநில‌ அர‌சு உத‌வ‌வில்லையா? நில‌ம் உங்க‌ளுடைய‌து, நில‌த்தை திருட‌ன், திருடிக்கொண்ட‌ பிற‌கு, ச‌ட்ட‌ம் திருட‌னுக்கே நில‌ம் சொந்த‌ம் என்று கூறிவிட்ட‌ப்பிற‌கு, நீதித்த‌வ‌றிய‌ ச‌ட்ட‌த்தை யாரும் குறைக்கூற‌வில்லை! ச‌ட்ட‌த்தை ம‌தித்தே ஆக‌ வேண்டிய‌ மாநில‌ அர‌சை குறைக்கூறி ம‌லிவு விள‌ம்ப‌ர‌ம் தேடுகிறார்க‌ள். கூட்ட‌ர‌சு நிதிம‌ன்ற‌ தீர்ப்பை மீறும் ப‌ட்ச‌த்தில், மாநில‌ ஆட்சியே கலைக்க‌ப்ப‌டும்; அதெல்லாம் எங்க‌ளுக்கு தெரியாது, நாங்க‌ள் சொல்வ‌துதான் ச‌ரியென்று நிற்ப‌வ‌ர்க‌ளை என்ன‌வென்று கூறுவ‌து?
த‌ங்க‌ள‌து சுய‌ ந‌ல‌னுக்காக‌ அனைத்து விவ‌கார‌ங்க‌ளையும் திசை திருப்பும் சில‌ர், க‌ம்போங் புவா பாலா விவ‌கார‌த்தில் திடிர் பாச‌ம‌ழை பொழிவ‌துதான் ஏனோ? சொல்லித்தான் தெரிய‌ வேண்டுமோ?
இந்த‌ ந‌ர‌க‌ன் போன்ற‌ ச்ய‌,ம‌லிவு விள‌ம்ப‌ர‌ விரும்பிக‌ளை விட‌, உத‌ய‌க்குமார், அல்ல‌து வேத‌மூர்த்தி ஆகியோரில் ஒருவ‌ர், அந்த‌ இங்கிலாந்து வ‌ழ‌க்கு என்ன‌வான‌தென்று க‌ண‌ப‌தி ராவ் அல்ல‌து வ‌ச‌ந்த‌க்குமாரோடு நேர‌டி விவாத‌த்திற்கு தேதி குறித்தால் ந‌ன்றாக‌யிருக்கும்.
உண்மை ம‌ட்டும.....